Showing posts with label முத்துவடுகநாத தேவர். Show all posts
Showing posts with label முத்துவடுகநாத தேவர். Show all posts

Tuesday, 2 June 2015

Sivagangai 2nd Rajah — Muthu Vaduganatha Peria Oodaya Thevar

கெளரிவல்லப முத்துவடுகநாத ராஜா என்னும் மாமன்னர் முத்துவடுகநாதப் பெரிய உடையாத்தேவர் அவர்களின் வீரம் செறிந்த வரலாற்றினை தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும். சின்ன மறவர் நாடாம் சிவகங்கை சீமையை அரசாட்சி செய்த இரண்டாம் மன்னர் ஆவார். அவரது 243 வது  நினைவேந்தல் விழா ஜூன்-25 அன்று காளையார்கோவில் மாலையீட்டில் நடைபெற உள்ளது. 

அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும். மறவர் சீமையின் மானம் காக்க வெள்ளையர்களோடு வீரப்போர் புரிந்து மறவாப்புகழ் பெற்ற மாமறவர் அவர்களது நினைவைப் போற்றும் வகையில் நடைபெறும் விழாவில் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் கலந்து கொள்கிறார். 

சுற்றுவட்டார பகுதியில் பெருந்திரளாக வாழக்கூடிய இளைஞர்கள் பங்கேற்று, மன்னரது தியாகத்தினை பரப்பிட வேண்டும்.