Friday 18 November 2016

தூரி எம்.ஆர்.இராமசாமித்தேவர் மணிமண்டபம் - தமிழக அரசுக்கு கோரிக்கை

பரமக்குடி நவ.18, இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சேவகராகவும் வாழ்ந்து மறைந்த பெரியவர் தூரி இராமசாமித் தேவர் அவர்களின் பிறந்த நாளில் அரசு விழா எடுக்கவும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்திடவும் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு 17.11.16 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் இந்திய நாடு ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்திற்கு கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது சுதந்திர உணர்வோடு போராடி – விடுதலை அடைந்திட பல போராட்டங்களையும், உயிர்த் தியாகங்களையும் அதிகஅளவில் நடத்தியதோடு, சிறை வாழ்வையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இதனை தாங்கள் பல முறை தங்களது சுதந்திர தின உரைகளில் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தைச் சார்ந்த எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்கள் இந்திய சுதந்திர உணர்வோடு பலமுறை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டு சிறை சென்று இருந்துள்ளார்.

தெய்வத்திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களோடு சேர்ந்து நாட்டின் விடுதலைக்காக பலமுறை சிறை சென்றதோடு, தேவரைப் போலவே தமது வாழ்வையும் திருமணம் செய்யாமலேயே நாட்டிற்காக அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார். வேலூர் மத்திய சிறை, பெல்லாரி மத்திய சிறை – ஆந்திரா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறைகளில் கைதியாக இருந்த இவரது தியாகத்தைப் போற்றும் விதமாக, இந்தியாவின் 25 வது சுதந்திரதின விழாவின் போது, அன்றைய பிரதம அமைச்சர் திருமதி. இந்திரா காந்தி அவர்கள் 15.08.1972 அன்று மத்திய அரசின் சார்பில் சிறந்த சுதந்திரப் போராட தியாகி என தாமிர பத்திரம் வழங்கி கெளரவித்துள்ளார்.

தேவர் திருமகனாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது மறைவுக்குப் பிறகு தமது 49 வது வயதில் திருமணம் செய்தவரான இவரது நாட்டுப்பற்றிற்கு சான்றாக தேவர் திருமகனார் தமது சொத்துகளில் ஒரு பாகத்தை இவரது பெயருக்கு எழுதி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவியான இரா.பூமயில் அவர்கள் தற்போது மத்திய / மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெற்று வருகிறார். கடந்த 1989 ஆம் வருடம் ஆகஸ்ட் 05 அன்று திரு.இராமசாமித்தேவர் அவர்கள் மரணம் அடைந்து விட்டார். அவரது தியாக உடல் அவரது சொந்த கிராமமான முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு, அவரது பிறந்த மற்றும் இறந்த நாட்களில் கிராம மக்களால் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டுமென அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆகவே, உண்மைத்தியாகிகளின் வாழ்விற்கு அங்கீகாரமும் – மரியாதையும் செலுத்துவதில் பெரும் முனைப்போடு செயல்படும் தங்களது தலைமையிலான தமிழக அரசின் சார்பில் தியாகி, தூரி எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்களின் நாட்டுப்பற்றையும், தியாக்கத்தையும் போற்றும் விதத்தில்  இவரது பிறந்த நாளில் (30.09.1914) அரசு விழா எடுத்திடவும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்திடவும் ஆவண செய்திடுமாறு தங்களை மறத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பாகவும், முதுகுளத்தூர் வட்டார கிராம பொதுமக்கள் சார்பாகவும் பணிவோடு வேண்டுகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.


Friday 14 October 2016

pudhumalar prabhakaran mobile number

pudhumalar prabhakaran mobile number 9942133644, 9952133644. maraththamizhar senai maanila amaippalar pudhumalar prabhakaran, 12/338, thiruvarangam salai, nethaji nagar, paramakudi - 623707.


Friday 24 June 2016

கொடி வழி பட்டியல் - விளக்கம்

                                                 -புதுமலர் பிரபாகரன் 

வாழையடி வாழையென வாழ்கவென பெரியவர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள். அதன் உள்அர்த்தங்களை அறிந்து கொள்ளும் முனைப்பின்றி கடந்து செல்பவர்களே அநேகம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தலைமுறைகளின் வரலாறு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நாகரீக உலகத்தின் அடையாளம் என்று பெற்ற தாய், தந்தையை கூட ஒதுக்கிவிட்டு தனிக்குடித்தனமாக வாழத் துவங்கிவிட்ட இன்றைய சூழலில் தலைமுறைகளின் வாழ்வியலும், அவர்களது கிளை உறவுகளும் தேவையற்ற சுமையாகிப் போனதில் வியப்பில்லை. குடும்ப விழாக்களுக்கு பெயர் போட்டு அச்சடித்து வரும் நிறைய பெரியவர்கள் தனது உறவுமுறை சொல்லி உங்க அய்யாவுக்கு தெரியும். உங்களுக்கு எங்க தெரியப்போகுது. வந்தா போனாத்தானே தெரியும் என நொந்து கொள்வார்கள். காரைக்குடி பகுதி செட்டியார்கள் ஒவ்வொரு குடும்பத்தினரும் பத்து பதினைந்து தலைமுறைப் பெயர்களைச் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.


நாம் அத்தகைய எவற்றையும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை என்பதைவிட அறிந்துகொள்வது கூட இல்லை. நம்முடைய பேரனுக்குப் பேரன் நம்மை அறிந்திருக்க மாட்டான் என்பது எவ்வளவு கொடுமையானதோ, அதற்கு இணையானது நாம் நமது முன்னோர்களை அறிந்திராமல் வாழ்வது. இன்றைய நாட்களில் ஒன்றிரண்டு தலைமுறை முன்னோர்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கும் நபர்கள் மிகக்குறைவே. எனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிவிட்ட நிலையிலும், எனது சொந்த கிராமத்தினர் கணேசத்தேவர் பேரன் என்றுதான் சொல்ல விரும்புகிறார்கள். நீதிமன்றங்களிலே உரக்கச் சொல்வது போல நாகுத்தேவர் வகையறா என்றுதான் பேசுகிறார்கள். ஆக, நானென்பது நானல்ல இந்த வகையறாக்கள் தான் நான்! இவர்கள்தான் எனது ஆணிவேர். இவர்களது பழமையும், பெருமையும், குடும்ப முறைகளும் எனது குருதியிலே பதிந்து கிடக்கிறது.

“தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” என்று தமிழில் பழமொழி உண்டு. இதனை தொல்காப்பியரும் பிள்ளை என்பவன் தந்தையின் மறு அச்சு என்கிறார். (தந்தையர் ஒப்பர் மக்கள்- தொல்-1092) ஆக தந்தையின் பிரதியாகிப் போன எனக்குள் தந்தையின் தந்தையென ஆயிரம் தலைமுறைகளின் வாசம் அடிக்கவே செய்கிறது. மறத்தமிழர் சேனை இயக்கத்தின் மாநில அமைப்பாளர் என்கிற முறையில் பல நேரங்களில் கலப்பு திருமணத்திற்கு எதிராக பதிவிட, பேச நேர்கின்ற பொழுதுகளில் அகநானூறும், புறநானூறும் போற்றிப் புகழ்ந்த இந்த சாதியின் பழைமையை சிதைக்க வரும் தேவர் சாதி தலைவர்கள் தங்களது சொந்த வரலாற்றை சொல்லிவிட்டு வாருங்கள் என்பேன். அவர்களின் சொந்த வரலாறு எனும் குடும்ப வரலாறு என்பது இன்றளவும் அவர்களால் சொல்ல முடியாததாகிவிட்டது. என்னுடைய கொடிவழியினையாவது யாவரும் அறிகிற வகையில் படையலிட வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசைகளோடு கொடி வழி முன்னவர்களையும், கிராமத்தையும், சமூகத்தையும் அதன் வரலாற்று பழமை மாறாமல் பாதுகாத்திடல் எமது கடமைகளில் ஒன்றாகிறது.

மறவர் சாதி கைபீது

மறவர் சாதி கைபீதுசுவடி மறவர் இனத்தின் உட்பிரிவுகளையும், மணமுறைகளையும், விதவை மறுமணம் மற்றும் மறவர்களுடைய திருமண சடங்குகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது.  கட்டுத்தாலி, சீக்குக்கழித்த கல்யாணம் போன்ற சடங்குகள் நடைபெறும் முறையை விவரிக்கிறது.

தமிழ்ச் சமூகத்தில் ஒவ்வொரு சாதிகளுக்குமான மணமுறை குறித்த விளக்கங்களும் தாலி குறித்தான கருத்தாடல்களும் மெக்கன்சி சுவடிகளில் வெளிப்பட்டுள்ளன.

காலின் மெக்கன்சியின் தொகுப்பு சென்னை பல்கலைக் கழக வெளியீடாக தமிழிலும் வந்துள்ளது. 

Saturday 11 June 2016

ரிபெல் சிலை திறப்பு - மறத்தமிழர் சேனை தொடர் போராட்டம்.



பெரிய மறவர் நாடு என வரலாறு போற்றும் இராமநாதபுரம் சீமையானது தனது வரலாற்றை செங்குருதியால் எழுதிக்கொண்டு, மரணத்திற்கு அஞ்சாத பல மாமறவர்களை தந்திருக்கிறது. அப்படிதான் 1760 ஆம் வருடம் மார்ச்-30 இல் பிறந்த முத்து விஜயராஜ முத்துராமலிங்க சேதுபதி தமது 12 வயதில் இராமநாதபுரம் மறவர் சீமையின் மன்னராக முடிசூட்டப்பட்டவர் ஆவார். ஆங்கிலேயர்கள், நவாபுகளின் கட்டற்ற வணிகத்தை முடக்க விற்பனை வரி, சுங்கவரி விதித்தவர், அந்நிய மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்ததன் விளைவாக 2-06-1772 இல் தனது தாயார், சகோதரியோடு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பத்தாண்டுகள் சிறையிலேயே வாடிய மன்னரின் தாயார் சிறையிலேயே மரணமடைந்தார்.

மறவர் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியதும் அஞ்சிய ஆங்கிலேயர்கள் 1782 இல் மன்னரை விடுதலை செய்தனர். மீண்டும் நல்லாட்சி செய்யத்துவங்கிய இவரது காலத்தில்தான் உலகப்புகழ் பெற்ற இராமேஸ்வரம் மூன்றாம் பிரகாரம் கட்டப்பட்டது. அதனைப்போலவே கடுகு சந்தை, தேவிபட்டினம், கோட்டைப்பட்டிணம் அன்னசத்திரங்கள் கட்டப்பட்டன. ஆயிரமாயிரம் பரப்பளவு கொண்ட நிலங்கள் முறையாக அளவிடப்பட்டன. மீண்டும் வலுவடையத் துவங்கிய மறவரது ஆட்சியை கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள் மன்னரைக் கைது செய்து திருச்சி சிறையிலும், பின்பு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும் சிறை வைத்த நிலையில் 1809 வருடம் ஜனவரி 23 ஆம் நாள் சென்னை சிறையிலேயே உயிர் துறந்த மாமன்னரை ரிபெல் என மக்கள் அழைக்கத் துவங்கினர்.

Monday 6 June 2016

marathamilar senai


pudhumalar prabhakaran photo

maraththamizhar senai State Organizer pudhumalar prabhakaran photos - மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின் புகைப்படங்கள். kallar, maravar, agamudaiyar Caste leader

புதுமலர் பிரபாகரன் புகைப்படங்கள்

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் வரவேற்பு அட்டைகள்.

மண்ணின் மானம் காக்கும் மறவர் கூட்டத்தின் ஒப்பற்ற ஊழியராகத் திகழும்; மறவர் வரலாறு காக்கும் மாமறவன் அண்ணன் புதுமலர் பிரபாகரன் அவர்களின் கொள்கை வழி நடப்போம்....