Wednesday 20 June 2018

மன்னர் முத்துவடுகநாதத் தேவர்

சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர் 




Muthuvaduganatha thevar


சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் மற்றும் இளைய ராணி கெளரி நாச்சியார் ஆகியோரின் 246 வது நினைவு நாள் மற்றும் வீரவணக்க நாள் விழா ஜூன் - 25 - 2018 அன்று காளையார்கோவில் மன்னர் மாலையீட்டில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதத் தேவரின் வீரத்தையும்; போர் திறனையும் புதிய தலைமுறையினர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மறத்தமிழர் சேனை இயக்கம் களப்பணி ஆற்றி வருகிறது. குறிப்பாக, ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, பொன்.பாண்டித்துரை தேவர், வேலு நாச்சியார், கீழத்தூவல் தியாகிகள் ஐவர், மன்னர் பாஸ்கர சேதுபதி, மாமன்னர் பூலித்தேவர் போன்ற மாபெரும் சமூக ஆளுமைகள் குறித்த விவாதங்களை கிளப்பி வெகுஜன கவனிப்பை ஏற்படுத்தியிருக்கிறோம்.

அதே சம முக்கியத்துவத்தோடு கடந்த சில வருடங்களாக திட்டமிட்டு உழைத்து வருகிறோம். சிவகங்கை சீமை அரசாண்ட மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர் அவர்கள் குறித்த விவாதத்தை கிளப்பும் நோக்கில் சுவர் விளம்பரங்கள் மறத்தமிழர் சேனை மதுரை மாவட்ட நிர்வாகிகளின் சிறந்த செயல்பாட்டால் நடைபெற்றது. தற்பொழுது 246 வது நினைவு நாளை முன்னிட்டு தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளால் சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டு உள்ளன. அவற்றில் வெகுமக்கள் கவனம் ஈர்த்த சிலவற்றை காணலாம்.

Thursday 12 April 2018

மறத்தமிழர் சேனை கொடி - முக்குலத்தோர் கொடி

மறத்தமிழர் சேனை கொடி மற்றும் நாடாண்ட மூவேந்தர்கள் கொடி அடிப்படையில் உருவானது ஆகும்.

maraththamizhar senai flag

mukkulathor symbol / thevar community sticker / mooventhar flag

Friday 18 November 2016

தூரி எம்.ஆர்.இராமசாமித்தேவர் மணிமண்டபம் - தமிழக அரசுக்கு கோரிக்கை

பரமக்குடி நவ.18, இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சேவகராகவும் வாழ்ந்து மறைந்த பெரியவர் தூரி இராமசாமித் தேவர் அவர்களின் பிறந்த நாளில் அரசு விழா எடுக்கவும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்திடவும் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு 17.11.16 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் இந்திய நாடு ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்திற்கு கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது சுதந்திர உணர்வோடு போராடி – விடுதலை அடைந்திட பல போராட்டங்களையும், உயிர்த் தியாகங்களையும் அதிகஅளவில் நடத்தியதோடு, சிறை வாழ்வையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இதனை தாங்கள் பல முறை தங்களது சுதந்திர தின உரைகளில் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தைச் சார்ந்த எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்கள் இந்திய சுதந்திர உணர்வோடு பலமுறை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டு சிறை சென்று இருந்துள்ளார்.

தெய்வத்திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களோடு சேர்ந்து நாட்டின் விடுதலைக்காக பலமுறை சிறை சென்றதோடு, தேவரைப் போலவே தமது வாழ்வையும் திருமணம் செய்யாமலேயே நாட்டிற்காக அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார். வேலூர் மத்திய சிறை, பெல்லாரி மத்திய சிறை – ஆந்திரா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறைகளில் கைதியாக இருந்த இவரது தியாகத்தைப் போற்றும் விதமாக, இந்தியாவின் 25 வது சுதந்திரதின விழாவின் போது, அன்றைய பிரதம அமைச்சர் திருமதி. இந்திரா காந்தி அவர்கள் 15.08.1972 அன்று மத்திய அரசின் சார்பில் சிறந்த சுதந்திரப் போராட தியாகி என தாமிர பத்திரம் வழங்கி கெளரவித்துள்ளார்.

தேவர் திருமகனாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது மறைவுக்குப் பிறகு தமது 49 வது வயதில் திருமணம் செய்தவரான இவரது நாட்டுப்பற்றிற்கு சான்றாக தேவர் திருமகனார் தமது சொத்துகளில் ஒரு பாகத்தை இவரது பெயருக்கு எழுதி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவியான இரா.பூமயில் அவர்கள் தற்போது மத்திய / மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெற்று வருகிறார். கடந்த 1989 ஆம் வருடம் ஆகஸ்ட் 05 அன்று திரு.இராமசாமித்தேவர் அவர்கள் மரணம் அடைந்து விட்டார். அவரது தியாக உடல் அவரது சொந்த கிராமமான முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு, அவரது பிறந்த மற்றும் இறந்த நாட்களில் கிராம மக்களால் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டுமென அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆகவே, உண்மைத்தியாகிகளின் வாழ்விற்கு அங்கீகாரமும் – மரியாதையும் செலுத்துவதில் பெரும் முனைப்போடு செயல்படும் தங்களது தலைமையிலான தமிழக அரசின் சார்பில் தியாகி, தூரி எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்களின் நாட்டுப்பற்றையும், தியாக்கத்தையும் போற்றும் விதத்தில்  இவரது பிறந்த நாளில் (30.09.1914) அரசு விழா எடுத்திடவும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்திடவும் ஆவண செய்திடுமாறு தங்களை மறத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பாகவும், முதுகுளத்தூர் வட்டார கிராம பொதுமக்கள் சார்பாகவும் பணிவோடு வேண்டுகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.


Friday 14 October 2016

pudhumalar prabhakaran mobile number

pudhumalar prabhakaran mobile number 9942133644, 9952133644. maraththamizhar senai maanila amaippalar pudhumalar prabhakaran, 12/338, thiruvarangam salai, nethaji nagar, paramakudi - 623707.


Friday 24 June 2016

கொடி வழி பட்டியல் - விளக்கம்

                                                 -புதுமலர் பிரபாகரன் 

வாழையடி வாழையென வாழ்கவென பெரியவர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள். அதன் உள்அர்த்தங்களை அறிந்து கொள்ளும் முனைப்பின்றி கடந்து செல்பவர்களே அநேகம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தலைமுறைகளின் வரலாறு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நாகரீக உலகத்தின் அடையாளம் என்று பெற்ற தாய், தந்தையை கூட ஒதுக்கிவிட்டு தனிக்குடித்தனமாக வாழத் துவங்கிவிட்ட இன்றைய சூழலில் தலைமுறைகளின் வாழ்வியலும், அவர்களது கிளை உறவுகளும் தேவையற்ற சுமையாகிப் போனதில் வியப்பில்லை. குடும்ப விழாக்களுக்கு பெயர் போட்டு அச்சடித்து வரும் நிறைய பெரியவர்கள் தனது உறவுமுறை சொல்லி உங்க அய்யாவுக்கு தெரியும். உங்களுக்கு எங்க தெரியப்போகுது. வந்தா போனாத்தானே தெரியும் என நொந்து கொள்வார்கள். காரைக்குடி பகுதி செட்டியார்கள் ஒவ்வொரு குடும்பத்தினரும் பத்து பதினைந்து தலைமுறைப் பெயர்களைச் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.


நாம் அத்தகைய எவற்றையும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை என்பதைவிட அறிந்துகொள்வது கூட இல்லை. நம்முடைய பேரனுக்குப் பேரன் நம்மை அறிந்திருக்க மாட்டான் என்பது எவ்வளவு கொடுமையானதோ, அதற்கு இணையானது நாம் நமது முன்னோர்களை அறிந்திராமல் வாழ்வது. இன்றைய நாட்களில் ஒன்றிரண்டு தலைமுறை முன்னோர்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கும் நபர்கள் மிகக்குறைவே. எனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிவிட்ட நிலையிலும், எனது சொந்த கிராமத்தினர் கணேசத்தேவர் பேரன் என்றுதான் சொல்ல விரும்புகிறார்கள். நீதிமன்றங்களிலே உரக்கச் சொல்வது போல நாகுத்தேவர் வகையறா என்றுதான் பேசுகிறார்கள். ஆக, நானென்பது நானல்ல இந்த வகையறாக்கள் தான் நான்! இவர்கள்தான் எனது ஆணிவேர். இவர்களது பழமையும், பெருமையும், குடும்ப முறைகளும் எனது குருதியிலே பதிந்து கிடக்கிறது.

“தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” என்று தமிழில் பழமொழி உண்டு. இதனை தொல்காப்பியரும் பிள்ளை என்பவன் தந்தையின் மறு அச்சு என்கிறார். (தந்தையர் ஒப்பர் மக்கள்- தொல்-1092) ஆக தந்தையின் பிரதியாகிப் போன எனக்குள் தந்தையின் தந்தையென ஆயிரம் தலைமுறைகளின் வாசம் அடிக்கவே செய்கிறது. மறத்தமிழர் சேனை இயக்கத்தின் மாநில அமைப்பாளர் என்கிற முறையில் பல நேரங்களில் கலப்பு திருமணத்திற்கு எதிராக பதிவிட, பேச நேர்கின்ற பொழுதுகளில் அகநானூறும், புறநானூறும் போற்றிப் புகழ்ந்த இந்த சாதியின் பழைமையை சிதைக்க வரும் தேவர் சாதி தலைவர்கள் தங்களது சொந்த வரலாற்றை சொல்லிவிட்டு வாருங்கள் என்பேன். அவர்களின் சொந்த வரலாறு எனும் குடும்ப வரலாறு என்பது இன்றளவும் அவர்களால் சொல்ல முடியாததாகிவிட்டது. என்னுடைய கொடிவழியினையாவது யாவரும் அறிகிற வகையில் படையலிட வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசைகளோடு கொடி வழி முன்னவர்களையும், கிராமத்தையும், சமூகத்தையும் அதன் வரலாற்று பழமை மாறாமல் பாதுகாத்திடல் எமது கடமைகளில் ஒன்றாகிறது.